Sunday, March 29, 2026

காமதா ஏகாதசி – இன்று ஹிந்து சிறப்பு நாள்


     காமதா ஏகாதசி – இன்று ஹிந்து சிறப்பு நாள்


இன்று காமதா ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளில் விரதம் இருப்பதால் பாவங்கள் நீங்கி, மன அமைதி, ஆரோக்கியம், செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

காமதா ஏகாதசி நாளில் பக்தர்கள் காலை எழுந்து குளித்து, விஷ்ணு / பெருமாள் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, “ஓம் நமோ நாராயணாய” என்று ஜெபிக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் நல்லது. இன்று விரதம் இருப்பவர்கள் சாதம் சாப்பிடாமல் பழம், பால், தண்ணீர் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஏகாதசி விரதம் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் என்று புராணங்களில் கூறப்படுகிறது. குடும்ப அமைதி, கடன் தள்ளுபடி, திருமண தடை நீக்கம், வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு இந்த விரதம் மிகவும் சிறப்பானது.


மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    


கும்ப ராசி – இந்த வாரம்

           

                கும்ப ராசி – இந்த வாரம்


கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் புது பிறக்கும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டி பேசுவர். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். குலதெய்வ வழிபடு சிறப்பாக அமையும். குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளி உணவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கவும். மனதில் உள்ள திட்டங்களை செயல்படுத்த வழி கிடைக்கும். கடன் பிரச்சனை குதலைதூக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். இது வரை இருந்து வந்த நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாகவே மறையும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்.


மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    


மகர ராசி – வார பலன்

             

                   மகர ராசி – வார பலன்


மகர ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பல நாட்களாக முடியாமல் இருந்த காரியம் கூட இப்போது முடியும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த மந்த நிலை மாறும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற முடியும். திட்டமிட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கடன் தொந்தரவுகள் குறையும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை படி கேட்டு நடப்பது நல்லது. உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வழிபடவும்.

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

தனுசு ராசி – இந்த வாரம்

     

            தனுசு ராசி – இந்த வாரம்


தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பொருளாதார பாதிப்புகள் படிப்படியாக குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரம பட வேண்டியிருக்கும், எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. பேச்சு திறமையால் அன்றாட பணிகளை எளிதாக்கி கொள்ள முடியும். மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் கூட சில நேரத்தில் எதிராகவே மாறலாம். குடும்பத்தில் ஆனந்தமும், குதூகலமும் நிலவும்.. நண்பர்கள் அனுசரனையுடன் இருப்பர். முன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். மனக்கவலைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : குரு பகவானை வழிப்படவும்

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

விருச்சிக ராசி – வார பலன்

       

            விருச்சிக ராசி – வார பலன்


விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். உங்களை சுற்றி நிறைய நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நிதி நிலைமை சீரடையும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமும், மன நிம்மதியும் இருக்கும். பாலிய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மனதில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் சகஜ நிலை காணப்படும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

கன்னி ராசி – இந்த வாரம்

         

            கன்னி ராசி – இந்த வாரம்


கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் செயல்திறனை கண்டு மற்றவர்கள் வியப்படைவர். பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபம் புரியவரும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேறும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். தேக நிலையில் முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். பயணங்களால் செலவுகளும், அலைச்சல்களும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

சிம்ம ராசி – வார பலன்

             

               சிம்ம ராசி – வார பலன்


சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்பத்திற்கு வேண்டியதை செய்து தர இயலும். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை காணப்படும். எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளவிலையே என்ற ஆதங்கம் ஏற்படும். வேண்டியவர்கள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது நண்பர்கள் அறிமுகமாவர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

கடக ராசி – இந்த வார பலன்

   

        கடக ராசி – இந்த வார பலன்


கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் பேச்சில் பொறுமையும், நிதானத்தையும் பின்பற்றுவது அவசியம். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெற முடியும். எதிர்ப்புகள் தானாக விலகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அது நாளடைவில் சீராகும். உடல் நலத்தில் கவனம் தேவை. உதவி கேட்டு வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர இயலும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புது வீடு, மனை வாங்கும் எண்ணம் வரும். நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

மிதுன ராசி – வார பலன்

         

            மிதுன ராசி – வார பலன்


மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது நேர்மையான செயல்களால் பலரது பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத பல விஷயங்கள் நடக்கும். பொருளாதார நிலை மேம்படும். பொது நலக் காரியங்களில் ஆர்வம் இருக்கும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்க முடியும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். புதிய திட்டங்கள் நல்ல பலனை தரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் சிறிது தாமத்திற்கு பின் கைக்கு வரும். குடும்பத்தினர் அனைத்து விஷயங்களிலும் ஆதரவாக இருப்பர். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

ரிஷப ராசி – இந்த வாரம்

       

             ரிஷப ராசி – இந்த வாரம்


ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல் படவேண்டியது மிக முக்கியம். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்திக்கொள்ளவும். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை விரைவில் உருவாகும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிப்படவும்

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

மேஷ ராசி – வார ராசி பலன்

     

          மேஷ ராசி – வார ராசி பலன்


மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. மன வலிமை கூடும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பணவரவு இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் வரும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. பயணங்களால் ஏற்பட்ட அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் கூட வேகமாக நடக்கத் தொடங்கும். உடல் ஆரோக்யம் பலம் பெரும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான பலன்கள் உண்டு. கொடுத்த கடன் கைக்கு திரும்ப வரும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

துலாம் ராசி – இந்த வார பலன்

 

     

       துலாம் ராசி – இந்த வார பலன்


துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்ப்புகள் அகலும். பயணங்கள் சாதகமான பலன் தரும். பெரியோர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிவரும். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். அனாவசியச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்யவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பொருள் சேர்க்கை இருந்த போதிலும் எதிர்பாராத பல செலவுகள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் வசதிகள் பெறுக வழி பிறக்கும். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    



மீன ராசி – இந்த வாரம் எப்படி இருக்கும்?

       

         மீன ராசி – இந்த வாரம் எப்படி இருக்கும்?


மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் எடுக்கும் காரியங்களில் சற்று சிரமம் இருந்தாலும், அதை வெற்றிகரமாக முடிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். மனஅழுத்தம் வராமல் தினமும் தியானம் செய்யுங்கள். குடும்பத்துடன் சந்தோஷமான நேரங்களை செலவிடுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சனைகள் தீரும். வேலைப்பளுவில் பாராட்டு கிடைக்கும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பைரவரை வணங்குவது நன்மை தரும்.

பரிகாரம் : பைரவரை வணங்கி வழிப்படவும்

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    


Friday, March 27, 2026

பிரதோஷம் – சிவபெருமானின் அருளைப் பெறும் புனித நாள்

                                         பிரதோஷம் 

 சிவபெருமானின் அருளைப் பெறும் புனித நாள்




பிரதோஷம் என்பது இந்து சமயத்தில் மிகவும் முக்கியமான ஆன்மீக நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் Lord Shiva அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை, தேய்பிறை மற்றும் வளர்பிறை திரயோதசி தினங்களில் பிரதோஷம் அனுஷ்டிக்கப்படுகிறது.


பிரதோஷ காலம் என்பது சூரிய அஸ்தமனத்திற்கு முன் மற்றும் பின் வரும் நேரமாகும். இந்த நேரத்தில் சிவனை வழிபடுவது மிகுந்த பலனை தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.


இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, சிவன் கோவில்களுக்கு சென்று அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். குறிப்பாக நந்தி தேவனுக்கு அபிஷேகம் செய்வதும் முக்கியமாக கருதப்படுகிறது. "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை ஜபிப்பதும், தீபம் ஏற்றி இறைவனை பிரார்த்திப்பதும் வழக்கம்.


பிரதோஷ நாளில் மனமாறி சிவனை வழிபட்டால், பாவங்கள் நீங்கி, மன அமைதி, ஆரோக்கியம், செல்வ வளம் ஆகியவை பெருகும் என்று நம்பப்படுகிறது. வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


ஆகையால், இந்த பிரதோஷ நாளை பக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானின் அருளைப் பெறுவோம்.

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

Tuesday, March 24, 2026

பங்குனி மாத பிரதோஷம் – சிவபெருமானின் அருள் கிடைக்கும் புனித நாள்

 



பங்குனி மாத பிரதோஷம் – சிவபெருமானின் அருள் கிடைக்கும் புனித நாள்

இன்று பங்குனி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ திரயோதசி தினம். இந்த நாள் மிக முக்கியமான பிரதோஷ விரத தினமாக கருதப்படுகிறது. இந்த நாள் சிவபெருமான் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால், வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, மன அமைதி மற்றும் வளம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பிரதோஷத்தின் சிறப்பு:

பிரதோஷ காலம் என்பது சூரிய அஸ்தமனத்திற்கு முன் வரும் புனிதமான நேரம். இந்த நேரத்தில் சிவன் கோவிலில் வழிபாடு செய்தால் பாவங்கள் நீங்கி, நல்ல பலன்கள் கிடைக்கும்.

 என்ன செய்ய வேண்டும்:

  • “ஓம் நம சிவாய” ஜபம் சொல்லவும்
  • சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம்
  • நந்தி முன் பிரார்த்தனை செய்யுங்கள்
  • தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு

இந்த பிரதோஷ தினத்தில் பக்தியுடன் சிவனை வழிபட்டால், குடும்பத்தில் சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.


மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

Monday, March 23, 2026

வார ராசி பலன் (23-03-2026 முதல் 29-03-2026 வரை)


வார ராசி பலன் (23-03-2026 முதல் 29-03-2026 வரை)

இந்த வாரம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் காணப்படும். குறிப்பாக வேலை, தொழில், பணவரவு, உடல்நலம், குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் சில முக்கியமான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இப்போது ராசி வாரியாக விரிவான பலன்களை பார்க்கலாம்.


மேஷம் 

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உடல்நலம் நல்லபடியாக இருக்கும். இந்த வாரம் புதிய முயற்சிகளை தொடங்க நல்ல நேரம்.

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9


ரிஷபம் 

இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வேலை இடத்தில் சற்று கவனம் தேவை. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். உடல்நலத்தில் சோர்வு, தலைவலி போன்ற பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் சிறிய மனக்கசப்புகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6


மிதுனம் 

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் காண்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல உதவி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5


கடகம் 

இந்த வாரம் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனால் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். பணவரவு தாமதமாக கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2


சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்க நல்ல நேரம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1


கன்னி 

இந்த வாரம் பணம் சேமிக்க நல்ல வாரம். நீங்கள் திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் அமைதி இருக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்வி முன்னேற்றம். உடல்நலம் நல்லபடியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5


துலாம் 

இந்த வாரம் சற்று மனஅழுத்தம் இருக்கும். வேலை தொடர்பான அழுத்தம் அதிகமாக இருக்கும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வார இறுதியில் நல்ல செய்தி கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6


விருச்சிகம் 

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடு செய்ய நல்ல நேரம். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9


தனுசு 

புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வெளிநாடு வேலை முயற்சிகள் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3


மகரம் 

குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நாள்: சனி
அதிர்ஷ்ட எண்: 8


கும்பம் 

இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தில் கவனம் தேவை. வேலை இடத்தில் சற்று பிரச்சினைகள் வரலாம். அமைதியாக செயல்பட்டால் பிரச்சினைகள் தீரும்.

அதிர்ஷ்ட நாள்: சனி
அதிர்ஷ்ட எண்: 8


மீனம் 

இந்த வாரம் மிகவும் நல்ல வாரம். நீங்கள் நினைத்த காரியம் நடக்கும். பணவரவு, குடும்ப மகிழ்ச்சி, தொழில் முன்னேற்றம் அனைத்தும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3


முடிவு

இந்த வாரம் சில ராசிகளுக்கு முன்னேற்றமும், சில ராசிகளுக்கு கவனமும் தேவைப்படும். எந்த ராசி ஆனாலும் கடின உழைப்பு மற்றும் அமைதியான முடிவுகள் வெற்றியை தரும்.

இந்த வாரம் அனைவருக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள்!


மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

Friday, March 20, 2026

ப்ரதமை தினம் – புதிய தொடக்கங்களுக்கு சிறந்த நாள்

 


ப்ரதமை தினம் – புதிய தொடக்கங்களுக்கு சிறந்த நாள்


 ப்ரதமை என்றால் என்ன?

அமாவாசைக்கு அடுத்த நாள் வரும் முதல் திதி தான் “ப்ரதமை”. இது சுக்ல பக்ஷத்தின் (வளரும் நிலா காலம்) ஆரம்ப நாளாகும்.
இந்த நாள் புதிய ஆற்றல், நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை குறிக்கிறது.


ஏன் இந்த நாள் முக்கியம்?

ப்ரதமை தினம் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் தொடங்கும் விஷயங்கள் நல்ல முறையில் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது.


 இன்று செய்ய வேண்டிய வழிபாடுகள்

இந்த நாளில் சில எளிய வழிபாடுகள் செய்து நல்ல பலன் பெறலாம்:

  • காலை சீக்கிரம் எழுந்து குளியல் செய்யுங்கள்

  • வீட்டில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுங்கள்

  • விநாயகர் வழிபாடு செய்யுங்கள் (தடைகள் நீங்க)

  • குடும்பத்துடன் சேர்ந்து இறைவனை நினையுங்கள்


 புதிய தொடக்கங்களுக்கு சிறந்த நாள்

ப்ரதமை தினம் புதிய முயற்சிகளை தொடங்க மிகவும் உகந்த நாள்:

  • புதிய வேலை / business ஆரம்பிக்கலாம்

  • நல்ல தீர்மானங்கள் எடுக்கலாம்

  • புதிய திட்டங்களை தொடங்கலாம்


 இந்த நாளின் ஆன்மீக பலன்கள்

இந்த நாளில் வழிபட்டால்:

  • மனதில் அமைதி கிடைக்கும்

  • வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் வரும்

  • தடைகள் குறையும்

  • வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஏற்படும்


 முடிவுரை

ப்ரதமை என்பது ஒரு சாதாரண நாள் அல்ல — இது புதிய ஆரம்பங்களை வரவேற்கும் நாள்.
இந்த நாளில் நல்ல எண்ணங்களுடன் செயல்பட்டால், உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக ஏற்படும்.

 இன்று தொடங்கும் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இறைவன் அருள் புரியட்டும்.

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com

                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

பங்குனி அமாவாசை – முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறும் புனித நாள்


        பங்குனி அமாவாசை – முன்னோர்களின்                             ஆசீர்வாதம் பெறும் புனித நாள்


 அமாவாசை என்றால் என்ன?

அமாவாசை என்பது நிலா இல்லாத நாள். ஆனால் ஆன்மீக ரீதியில் இது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக பங்குனி மாதத்தில் வரும் அமாவாசை, முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கு மிகவும் சிறந்த நாளாகும்.


 முன்னோர்களை நினைக்கும் நாள்

இந்த நாளில் நாம் நம்முடைய பித்ருக்கள் (முன்னோர்கள்) நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம். இது அவர்களின் ஆத்மா சாந்தி அடைய உதவும் என்று நம்பப்படுகிறது.
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் குடும்பத்தில் அமைதி மற்றும் முன்னேற்றம் அதிகரிக்கும்.


 இந்த நாளில் செய்ய வேண்டியவை

பங்குனி அமாவாசை நாளில் சில எளிய வழிபாடுகள் செய்யலாம்:

  • காலை சீக்கிரம் எழுந்து குளியல் செய்யுங்கள்

  • பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள்

  • சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்

  • வீட்டில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுங்கள்


 தர்மம் செய்வது ஏன் முக்கியம்?

இந்த நாளில் அன்னதானம் அல்லது ஏழைகளுக்கு உதவி செய்வது மிகப்பெரிய புண்ணியம் தரும்.
ஒரு சிறிய உதவி கூட பல மடங்கு நன்மையாக திரும்பும் என்று நம்பப்படுகிறது.


இந்த நாளின் ஆன்மீக பலன்கள்

பங்குனி அமாவாசையில் வழிபட்டால்:

  • மன அமைதி கிடைக்கும்

  • குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்

  • நன்மை மற்றும் வளம் பெறலாம்

  • எதிர்மறை சக்திகள் நீங்கும்


 முடிவுரை

பங்குனி அமாவாசை என்பது ஒரு சாதாரண நாள் அல்ல. இது நம்முடைய முன்னோர்களை நினைத்து நன்றி சொல்லும் நாள்.
இந்த நாளில் சிறிய வழிபாடுகள் செய்தாலும், அது நம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.

முன்னோர்களின் ஆசீர்வாதத்துடன் உங்கள் வாழ்க்கை அமைதியாகவும் வளமாகவும் இருக்கட்டும்.   

மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com

                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp    

Tuesday, March 17, 2026

இன்று மார்ச் 17, 2026 – கிருஷ்ண பக்ஷ துவாதசி தினத்தின் ஆன்மீக முக்கியம்

 

இன்று மார்ச் 17, 2026 – கிருஷ்ண பக்ஷ துவாதசி தினத்தின் ஆன்மீக முக்கியம்


பங்குனி மாதம் – கிருஷ்ண பக்ஷ துவாதசி

இன்று மார்ச் 17, 2026 (செவ்வாய் கிழமை). இந்து பஞ்சாங்கப்படி இன்று கிருஷ்ண பக்ஷ துவாதசி எனப்படும் புனித தினமாகும். இந்த நாள் Ekadashi விரதத்தின் அடுத்த நாள் ஆகும். நேற்று ஏகாதசி விரதம் இருந்தவர்கள் இன்று துவாதசி நாளில் பரணை செய்து விரதத்தை முடிப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த நாள் முழுவதும் Vishnu பகவானை வழிபடுவதற்கு மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. பக்தர்கள் காலை எழுந்து விஷ்ணு நாமங்களை ஜபித்து, பூஜை செய்து, இறைவனின் அருளைப் பெறுகிறார்கள். துவாதசி தினத்தில் பக்தியுடன் வழிபட்டால் மன அமைதி, குடும்பத்தில் செழிப்பு மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 துவாதசி தினத்தின் ஆன்மீக நன்மைகள்

  • விஷ்ணுவை பக்தியுடன் வழிபட்டால் பாபங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது

  • வீட்டில் சாந்தி மற்றும் செழிப்பு அதிகரிக்கும்

  • மன அமைதி மற்றும் நல்ல எண்ணங்கள் உருவாகும்

  • குடும்பத்தில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்

 துவாதசி நாளில் செய்ய வேண்டியவை

  • அதிகாலை எழுந்து குளித்து விஷ்ணு பூஜை செய்யவும்

  • Vishnu Sahasranamam பாராயணம் செய்யலாம்

  • சுத்தமான சாத்விக உணவை உண்டு விரதத்தை முடிக்கலாம்

  • ஏழைகளுக்கு உணவு வழங்கும் அன்னதானம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்

இந்த நாளில் எளிமையாகவும் உண்மையான பக்தியுடனும் இறைவனை வழிபடுவது மிகவும் முக்கியமானது.


மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com

                                        📲 WhatsApp 📲 Contact via WhatsAp     

Monday, March 16, 2026

மார்ச் 15, 2026 – பிரதோஷ விரதத்தின் ஆன்மீக முக்கியத்துவம்

 


மார்ச் 15, 2026 – பிரதோஷ விரதத்தின் ஆன்மீக முக்கியத்துவம்

மார்ச் 15, 2026 அன்று இந்து பஞ்சாங்கப்படி பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்பட்ட ஒரு புனித நாள். இந்த நாள் முழுவதும் சிவபெருமான் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மாதத்தில் இரு முறை வரும் பிரதோஷ தினம் சிவபக்தர்களுக்கு மிகவும் முக்கியமான ஆன்மீக நாளாகும்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் மறையும் நேரத்துக்கு முன் மற்றும் பின் வரும் சுமார் ஒரு மணி நேர காலமாகும். இந்த நேரத்தில் சிவனை வழிபடுவது மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது. பக்தர்கள் சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்கள். பலர் இந்த நாளில் விரதம் இருந்து மாலை நேரத்தில் சிவபெருமானை வழிபடுகிறார்கள்.

இந்த நாளில் “ஓம் நம சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறப்பானதாக நம்பப்படுகிறது. இந்த மந்திரத்தை மனதார ஜபிப்பதால் பாவங்கள் நீங்கி மன அமைதி, ஆன்மீக சக்தி மற்றும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

மேலும், இந்த நாள் கிருஷ்ண பக்ஷ தசமி / ஏகாதசி திதியில் வந்ததால், இந்த நாளின் ஆன்மீக முக்கியத்துவம் இன்னும் அதிகரித்ததாக கருதப்படுகிறது. பிரதோஷ தினத்தில் சிவபெருமானை பக்தியுடன் வழிபடுவது குடும்பத்தில் நன்மை, ஆரோக்கியம் மற்றும் வளத்தை தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com

https://www.instagram.com/reel/DV74hFFiF68/?igsh=MWJiNXhxNW01d2pmbQ==


                                   📲 WhatsApp 📲 Contact via WhatsAp