2026ல் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா? பெரிய மாற்றங்கள் வருமா?
ரிஷப ராசி 2026 பலன்கள் – அற்புதமான வெற்றியின் ஆண்டு
2026ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். இந்த வருடம் முழுவதும் நீங்கள் எங்கு சென்றாலும் தனித்துவமாக ஜொலிப்பீர்கள். முக்கிய நிகழ்வுகளில் முக்கியஸ்தராக கலந்துகொள்வீர்கள். வயது அதிகமானாலும் இளமையும் சுறுசுறுப்பும் குறையாது. குடும்பம், நண்பர்கள், சமூகத்திற்காக இடைவிடாமல் உழைப்பீர்கள்.
ஜனவரி – மே 2026
ஜனவரி 17ஆம் தேதிக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் தென்படும். தைப்பொங்கல் முதல் நல்ல அதிர்ஷ்டம் ஆரம்பமாகும்.
Thai Pongal பிறகு எதிர்பார்த்த செயல்கள் விரைவாக நடக்கும்.
இந்த காலகட்டத்தில் குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால்:
-
வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு
-
பணவரவு அதிகரிப்பு
-
வேலை மாற்றம் / வீடு மாற்றம் சாத்தியம்
-
தாமதமான திருமணம் நடைபெறும்
-
குழந்தை பாக்கியம் கிடைக்கும்
ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். உணவு கட்டுப்பாடு முக்கியம்.
ஜூன் – அக்டோபர் 14
குரு மூன்றாம் இடத்திற்கு மாறுவதால்:
-
சிறுசிறு செலவுகள் அதிகரிக்கும்
-
அலச்சல் இருக்கும்
அக்டோபர் 14 – டிசம்பர்
குரு நான்காம் இடத்திற்கு மாறுவதால்:
-
சிறிய வாகன விபத்து சாத்தியம்
-
பணம் கொடுத்து ஏமாறும் வாய்ப்பு
-
வீண் பழிகள் வரலாம்
இந்த காலத்தில் ராசிநாதன் சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் இரவு பயணங்களை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நன்றாக யோசிக்கவும்.
தொழில் & வியாபாரம்
ஜனவரி முதல் ஜூன் வரை உத்தியோகம் மற்றும் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். மே மாதத்திற்குள் புதிய ஒப்பந்தங்கள், பங்குதாரர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பொறுமை அவசியம்.
திருமணம்
மகளுக்கு திருமணம் கூடிவரும் வாய்ப்பு. கோலாகலமாக திருமணம் நடைபெறும்.
பரிகாரம்
இந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன் பெற:
Patteswaram Durga Temple சென்று ஸ்ரீ துர்க்கை அம்மனை தரிசிக்கவும்.
வாரா வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.
நீல நிற துணி மற்றும் பச்சைப் பயிர் தானம் செய்யவும்.
2026ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி, செல்வாக்கு, முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக அமையும்.

No comments:
Post a Comment