மகர ராசி 2026 சனி பெயர்ச்சி பலன்கள் – சகாய சனி உங்களுக்கு பெரிய எழுச்சி!
2026ஆம் ஆண்டு நடைபெறும் சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப் போகிறது. இதுவரை பல சோதனைகள், தாமதங்கள், மன அழுத்தங்கள் அனுபவித்திருந்த நீங்கள் இப்போது நிம்மதி சுவாசிக்கப் போகிறீர்கள்.
மூன்றாம் இட சனி – “சகாய சனி”
இந்த பெயர்ச்சியில் சனி மூன்றாம் இடத்திற்கு செல்கிறார். ஜோதிட சாஸ்திரப்படி இது “சகாய சனி” என அழைக்கப்படுகிறது.
இதன் அர்த்தம் என்ன?
-
உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்
-
தன்னம்பிக்கை அதிகரிக்கும்
-
தொழிலில் முன்னேற்றம்
-
வெளிநாட்டு யோகம்
-
லாப வாய்ப்புகள்
-
திடீர் பணவரவு
சனி ஐந்தாம் இடத்தை பார்க்குவதால் யோகங்கள் அதிகரிக்கும்.
ஒன்பதாம் இட பார்வையால் அதிர்ஷ்டம் சேரும்.
பன்னிரண்டாம் இட பார்வையால் விரயங்கள் கூட சுப விரயமாக மாறும்.
தொழில் & பண பலன்
இதுவரை:
-
கையில் வந்த பணம் தங்காமல் போனது
-
முயற்சிகள் பலன் தராமல் இருந்தது
-
வேலை அழுத்தம் அதிகம் இருந்தது
இப்போது:
-
வியாபாரத்தில் லாபம்
-
வாங்கியதை விட அதிக விலையில் விற்கும் யோகம்
-
முதலீடுகள் வளர்ச்சி தரும்
-
தன்னிச்சையாக business தொடங்கும் தைரியம்
“சனி கொடுத்தால் யாராலும் தடுக்க முடியாது” என்ற பழமொழி உங்களுக்கே பொருந்தும் காலம் இது.
குடும்பம் & தனி வாழ்க்கை
-
குடும்பத்துடன் சுற்றுலா வாய்ப்பு
-
மன சுதந்திரம்
-
தனியாக முடிவெடுக்கும் நிலை
-
திருமண வீடு, மங்கள நிகழ்வுகள்
இதுவரை பட்ட பாடுகளுக்குப் பிறகு, இப்போது வாழ்க்கை ஒரு புதிய நிலைக்கு செல்கிறது.
கவனிக்க வேண்டியது
-
அதிக தைரியத்தில் தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்கவும்
-
முயற்சி தொடர வேண்டும் – சனி சோம்பேறிகளை விரும்ப மாட்டார்
-
பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்

No comments:
Post a Comment