கன்னி ராசிக்காரர்கள் – பிறப்பு முதல் வெற்றி வரை என்ன நடக்கும்?
கன்னி ராசியின் அதிபதி புதன். அறிவு, விவேகம், வாக்குச் சாதுரியம் இவங்களோட பலம். தோல்வியை ஏற்காத மனப்பாங்கு, எதையும் ஆழமாக ஆராயும் குணம் இவர்களுக்குண்டு. வேலைவிடத்து அனுபவம் தேடி பிறகு சொந்த தொழிலில் வெற்றி பெறுவார்கள். ஹோல்சேல், இம்போர்ட்–எக்ஸ்போர்ட், ஃபினான்ஸ், ஜோதிடம், பத்திரிக்கை, உணவு மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற துறைகள் நல்ல பலன் தரும்.
குழந்தை விஷயத்தில் ஆரம்பத்தில் சின்ன சவால்கள் இருக்கலாம். சகோதரர்கள் மூலம் ஆதாயமும் பின்னர் கருத்து வேறுபாடும் வரலாம். 40 வயதிற்கு பிறகு தர்ம-கர்ம யோகம் பலிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம் – ஆனால் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, குறிப்பாக விஷ்ணு வழிபாடு மிகுந்த நன்மை தரும்.

No comments:
Post a Comment